செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 18 ஜனவரி 2021 (11:16 IST)

கல்யாண வீட்டில் மொய்… கூகுள் பே & போன் பே மூலமாக வசூலித்த மணமக்கள்!

கல்யாண வீட்டில் ஆன்லைன் ட்ரான்ஸ்சேக்‌ஷன் மூலமாக மொய் வசூலித்த தம்பதியினர் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.

கல்யாணம் போன்ற சுபகாரியங்களின் போது மணமக்களுக்கு உறவினர்களும் நண்பர்களும் அன்பளிப்பு வழங்கி தங்கள் பாசத்தை வெளிப்படுத்துவர். இந்தியாவில் அன்பளிப்புகள் ஒருபுறம் இருந்தாலும் மொய் எனப்படும் பணமாக அளிப்பதும் உண்டு. தற்போது கொரோனா காரணமாக இந்த முறையயை நவீனப்படுத்தியுள்ளனர் ஒரு தம்பதியினர்.

துரை பாலெரங்காபுரம் சரவணன் என்பவருக்கும், பெங்களூரில் ஐ.டி நிறுவனத்தில் பணிபுரியும் மதுரை அனுப்பானடியை சேர்ந்த சிவசங்கரி என்பவருக்கும் மதுரையில் நடைபெற்ற திருமண விழாவில் யுபிஐ மூலமாக மொய் வசுலித்துள்ளனர் இந்த தம்பதியினர். இதற்காக பார்கோட் உருவாக்கி ஆன்லைன் பணம் அனுப்ப வசதியாக செய்துள்ளனர். இது சம்மந்தமான புகைப்படம் இணையத்தில்  வைரலாகி வருகிறது.