வியாழன், 12 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (20:15 IST)

2024 டி20உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான தேதி அறிவிப்பு

Cricket
உலகில் பல விளையாட்டுகள் இருந்தாலும், கிரிக்கெட்டிற்கு என கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.

டெஸ்ட், ஒருநாள் போட்டிகளை தாண்டி, ஐபிஎல் வருகைக்குப் பின், டி20 போட்டிகள் அனைத்து நாடுகளிலும் நடந்து வருகிறது. எனவே மற்ற போட்டிகளை காட்டிலும் இதில் விறுவிறுப்பு அதிகம்.

இந்த  நிலையில், ஐசிசி கிரிக்கெட் அமைப்பு நடத்தும், உலககோப்பை டி20 உலகக் கோப்பைத் தொடர், கரீபியன் மற்றும் அமெரிக்காவில் நடக்கும் என  ஏற்கனவே அறிவிப்புகள் வெளியானது.

இந்த நிலையில், கரீபியன் மற்றும் அமெரிக்காவில் நடைபெறவுள்ள 2024 ஆம் ஆண்டிற்காக டி-20 கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 4 ஆம் தேதி தொடங்கி ஜூன் 2 ஆம் தேதி முடிவடைய உள்ளதாக ஐசிசி கிரிக்கெட் அமைப்பு இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.