1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 11 டிசம்பர் 2024 (08:10 IST)

ஃபார்மில் இல்லாத ரோஹித் ஏன் ஓப்பனிங் இறங்க வேண்டும்?... ஹர்பஜன் சிங் கேள்வி!

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்று 1-1 என்ற கணக்குடன் சமனில் உள்ளன.

முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய தொடக்க ஜோடியான கே எல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாவது போட்டியிலும் அதே நிலையில் ஆடினர். கேப்டன் ரோஹித் ஷர்மா ஆறாவது வீரராக இறங்கி இரண்டு இன்னிங்ஸிலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார்.

இந்நிலையில் மூன்றாவது போட்டியில் ரோஹித் ஷர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக விளையாட வேண்டும் என கவாஸ்கர் மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் தெரிவித்துள்ளனர். இதற்கு ஹர்பஜன் சிங்  பதிலளித்துள்ளார். அதில் “ஃபார்மில் இல்லாத ரோஹித் ஷர்மா ஏன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்?. ஜெய்ஸ்வால்- ராகுல் ஜோடியே தொடக்க ஆட்டக்காரர்களாக விளையாட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.