1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : புதன், 11 டிசம்பர் 2024 (18:18 IST)

பும்ரா மிகக் குறைவான போட்டிகளிலேயே விளையாடுகிறார்… சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

இந்தியா - ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகள் இடையேயான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் ட்ராபி டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. இதில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளை வென்று 1-1 என்ற கணக்குடன் சமனில் உள்ளன.

முதல் போட்டியில் சிறப்பாக ஆடிய தொடக்க ஜோடியான கே எல் ராகுல் மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரண்டாவது போட்டியிலும் அதே நிலையில் ஆடினர். கேப்டன் ரோஹித் ஷர்மா ஆறாவது வீரராக இறங்கி இரண்டு இன்னிங்ஸிலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்தார். இதனால் பிரிஸ்பேனில் நடக்கும் அடுத்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டி நடக்கும் பிரிஸ்பேன் நகருக்கு இந்திய அணியினர் சென்று சேர்ந்துள்ளனர். விமான நிலையத்தில் அவர்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.