ஒரே வாரத்தில் 225 கோடி அள்ளிய சல்மான் கானின் ‘ரேஸ்-3’

race
Last Modified திங்கள், 25 ஜூன் 2018 (09:28 IST)
சல்மான் கான் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ரேஸ் 3’ திரைப்படம் ஒரே வாரத்தில் 225 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
சல்மான் கான் நடிப்பில் உருவாகிய ‘ரேஸ் 3’ ரம்ஜான் அன்று வெளியிடப்பட்டது. ரெமோ டிசோஸா இயக்கியுள்ள இந்தப் படத்தில் அனில் கபூர், ஜாக்குலின் பெர்னாண்டஸ், பாபி தியோல், டெய்ஸி ஷா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
 
இந்த படம் வெளியான ஒரே வாரத்தில் 225 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த படம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படம் 400 கோடி ரூபாய் வரை வசூல் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்மூலம் சல்மான் கான் 13 வது முறையாக 100 கோடி வசூலை தாண்டிய முதல் இந்திய நடிகர் என்ற பெறுமையை பெற்றுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :