வெள்ளி, 20 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வருடாந்திர ஜாதகம் விவரங்கள்
Written By
Last Updated : செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (14:13 IST)

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 (துலாம்)

துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் ராசியில் இருந்து  தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

 
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் ரண ருண ரோக ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக அஷ்டம ஸ்தானத்தையும், ஒன்பதாம் பார்வையாக தொழில் ஸ்தானத்தையும் பார்க்கிறார்.
 
பலன்: அமைதியான வாழ்க்கையை விரும்பும் துலா ராசி அன்பர்களே! இந்தக் குருபெயர்ச்சி உங்கள் முக்கியத்துவத்தை மற்றவர்களுக்கு காட்டும் விதமாக  அமைகிறது. குடும்பத்தில் அனைவரும் உங்களை மதித்து, உங்கள் பேச்சுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். வீட்டிற்கு தேவையான பொருட்களை  வாங்கி  மகிழ்வீர்காள். நீண்ட நாட்களாக உடம்பில் இருந்த நோய் குணமாகும். எந்த தொந்தரவும் இருக்காது .
 
தொழிலில் இது வரை இருந்த தடைகள் விலகும். நீங்கள் உங்கள் தொழிலின் உச்சத்தை நீங்கள் அடைய வழி வகுக்கும். கிடைக்கும் வாய்ப்புகளை  தவறவிடாமல் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
 
உத்யோகஸ்தர்கள் உங்களின் பதவி உயர்வு மற்றும் பணியிட மாற்றத்திற்காக நீண்ட நாட்களாக காத்திருந்திருப்பீர்கள். அவை இப்போது உங்களுக்கு விரும்பிய  படியே கிடைக்கும். கவலை வேண்டாம்.
 
பெண்களுக்கு நிம்மதியான காலகட்டமாக இருக்கும். சரியான நேரத்தில் உறங்காமல் தவித்து வந்த காலகட்டங்கள் மாறும். பயணம் மூலம் நல்ல செய்தி  கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்து வந்த தடைகள் அகலும். சிலர் பாதியில் நிறுத்திய படிப்பைத் தொடரவும் வாய்ப்பு கிடைக்கும். அரசியல்  துறையினருக்கு பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் குறையும். வரவேண்டிய பணம் வந்து சேரும். அடிக்கடி வெளியூர் சென்று வரவேண்டியதிருக்கும்.
 
கலைத்துறையினருக்கு யோகமான காலகட்டம். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். அடிக்கடி வெளியூர் சென்று வருவீர்கள். உங்களின் பெயர்  அனைவருக்கும் தெரியும் வகையில் சில முக்கிய படங்களில் நடிப்பீர்கள்.
 
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியில் தாங்கள் எதிர்பார்த்திருந்த உதவிகள் கடின முயற்சிக்குப் பின்பே கிடைக்கும்.  சிலருக்கு பணவரவு கிடைக்க  அலைய வேண்டி வரலாம். பண உதவி கிடைக்க தாமதமானாலும் அது கிடைத்து விடும். 
 
சுவாதி: இந்த குரு பெயர்ச்சியில் வீண் விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் தங்களுக்கு எதிராக செயல்பட்டு வந்தவர்களின் ஆதிக்கம் குறையும்.  ஆதலால் நிம்மதி பெருமூச்சு விடுவீர்கள். மனம் நிம்மதி பெற தியானம் செய்யுங்கள். 
 
விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியில் சில அன்பர்களுக்கு கண் சம்மந்தமான நோய் ஏற்பட்டு மறையும். கணவன்,மனைவியரிடேயே பிரச்சினைகள்  இருந்தால் சரியாகி விடும். எதிர்பார்த்திருந்த வருமானம் கைக்கு கிடைப்பது மன நிறைவைத் தரும். 
 
பரிகாரம்: தினமும் ஸ்ரீ ராமரை வணங்க ஏற்றம் உண்டாகும்.