ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வருடாந்திர ஜாதகம் விவரங்கள்
Written By
Last Updated : செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (13:09 IST)

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 (கடகம்)

கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் சுக ஸ்தானத்திலிருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் பாக்கிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக லாப ஸ்தானத்தையும்,  ஒன்பதாம் பார்வையாக ராசியையும், பார்க்கிறார்.
 
பலன்: மன அமைதியை விரும்பும் கடக ராசி அன்பர்களே! இந்த குருப்பெயர்ச்சியால் குடும்ப நிம்மதியும், லாபமும் அமையப் பெறப் போகிறிரீக்ள். குடும்பத்தில் இருந்த மனக் குழப்பங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். உங்களை அவமானப் படுத்தியவர்கள் எல்லாம் உங்களை ஆச்சரியமுடன் பார்க்கும் காலமாக இது  இருக்கும். அதை பயன்படுத்தி உங்கள் பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ளுங்கள்.
 
தொழிலைப் பொறுத்தவரை இதுவரை இருந்து வந்த மந்தநிலையில் இனி ஓரளவிற்கு முன்னேற்றத்தை காணலாம். ஆர்டருக்காக திருப்பி அனுப்பிய அனைவரும் உங்களைக் கூப்பிட்டு புதிய ஆர்டர்களைக் கொடுப்பார்கள்.
 
உத்தியோகத்தைப் பொறுத்தவரையில் சிறிது மந்த நிலை காணப்பட்டாலும்  அவர்கள் பதவிஉயர்வுக்கான தேர்வுகளில் வெற்றி பெற்று பதவி உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். அலுவலகத்தில் அனைவராலும் கேளிக்கைக்கு ஆளாகிய நீங்கள் குருவின் அனுகிரகத்தால் ஓரளவிற்கு மதிப்பு, மரியாதையுடன் நடத்தப்பெறுவீர்கள்.
 
பெண்களில் சிலருக்கு திருமண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சினைகள் தீரும். திருமண வாழ்வில் விவகாரத்து வரை சென்றவர்கள் கூட குருவின்  கடாட்சத்தால் பிரச்சினைகளை தீர்த்து சேர வாய்ப்புள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் இருந்த வந்த மந்த நிலை மாறி ஓரளவிற்கு படிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். அரசியல்துறையினருக்கு கட்சிப் பணியில் தொய்வு வரலாம். அதிரடி முடிவுகள் கட்சியில் எடுக்கப்படும். கலைத்துறையினருக்கு நிறைய பட வாய்ப்புகள் வரும். அழகு கூடி காட்சியளிப்பீர்கள். புதிய வாய்ப்புகள் வந்து உங்களை மெருகேற்றும்.
 
புனர்பூசம் 4-ம் பாதம்: இந்த குரு பெயர்ச்சி சிலருக்கு திருமண பேச்சு வார்த்தை கைகூடி வரலாம். வாய்ப்புகள் வரும் போது இறைவனை வேண்டி  தொடங்குங்கள். எதையும் தள்ளிப் போட வேண்டாம். சிறு தவறு கூட பெரிய பாதிப்பை ஏற்படுத்தக் கூடும். கவனமாக இருக்கவும்.
 
பூசம்: இந்த குரு பெயர்ச்சியில் அவ்வப் போது உடல் உபாதைகள் ஏற்படக்கூடும். உங்களிடம் வேலை பார்ப்பவர்களுக்காக சிறு தொகை செலவிட நேரலாம்.  அவரின் தேவையைக் கருதி பூர்த்தி செய்வீர்கள். சிலருக்கு பாராட்டுகள் கிடைக்கலாம்.
 
ஆயில்யம்: இந்த குரு பெயர்ச்சியில்  புதிய வேலைக்கு விண்ணப்பிபவர்கள் நல்ல முறையில் செய்யலாம். நிலுவையிலுள்ள முதலீடுகள் கைக்கு கிடைக்க அலைய நேரலாம். நீங்கள் துணிந்து எடுக்கும் முடிவுகளால் எதையும் சாதிப்பீர்கள்.
 
பரிகாரம்: வியாழக்கிழமை தோறும் குருபகவானுக்கு கொண்டைக்கடலை மாலை அணிவியுங்கள்.