ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. வருடாந்திர ஜாதகம் விவரங்கள்
Written By
Last Updated : செவ்வாய், 25 செப்டம்பர் 2018 (14:47 IST)

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 (மகரம்)

மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள் திருவோணம் அவிட்டம் 1,2 பாதங்கள்). கிரகநிலை: 04-10-2018 அன்று இரவு 10.05 மணிக்கு குரு பகவான் உங்களின் தொழில் ஸ்தானத்திலிருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
லாப ஸ்தானத்தில் இருந்து ஐந்தாம் பார்வையாக உங்களின் தைரிய வீரிய ஸ்தானத்தையும், ஏழாம் பார்வையாக பஞ்சம ஸ்தானத்தையும், ஒன்பதாம்  பார்வையாக களத்திர ஸ்தானத்தையும் பார்க்கிறார். பலன்: வாழ்க்கையில் வளமான வாழ்வு வாழ ஆசைப்படும் மகர ராசி அன்பர்களே!
 
இந்த குருபெயர்ச்சியால் உங்களுக்கு பாக்கியத்திற்கு குறைவிருக்காது. முக்கிய நிகழ்வுகளில் நீங்கள் தான் முக்கியஸ்தர்களாக இருப்பீர்கள்.
 
குடும்பத்தில் பாக்கியத்திற்குக் குறைவிருக்காது. திருமண யோகம்,. குழந்தை பாக்கியம், புது மனை வாங்குதல், வாகனம் வாங்குதல் போன்ற சுப காரியங்கள்  வரிசையாக நடக்கும். பண வரவும் சீராக இருக்கும் என்பதால் அவற்றை சரியான முறையில் முதலீடு செய்யுங்கள். பிற்காலத்திற்கு உதவியாக இருக்கும்.
 
தொழிலில் சிறப்பான லாபத்தை அடையப் போகிறீர்கள். சரியான முறையில் முதலீடு செய்வீர்கள், உங்கள் லாபம் இரட்டிப்பாகும். சோம்பல் இன்றி உழைக்கும்  எண்ணம் தோன்றும். இதனால் உற்பத்தி அதிகமாகும். உத்யோகஸ்தர்களுக்கு மேலிடத்துடன் இருந்த வந்த சில சச்சரவுகள் முடிவுக்கு வரும். உங்கள் பக்க நியாயத்தை எடுத்துக் கூற ஒரு வாய்ப்பு கிடைக்கும்.
 
பெண்களுக்கு கணவனுடன் இருந்துவந்த சில மனக்குழப்பங்கள் தீரும். மனதில் உற்சாகம் பிறக்கும். சிலர் புதிய தொழில் தொடங்குவார்கள். மாணவர்கள் தங்கள் சந்தேகங்களை ஆசிரியரிடம் கேட்டு தெளிவடையுங்கள். மேனேஜ்மெண்ட் சம்பந்தமான படிப்புகளில் சிறந்து விளங்குவீர்கள்.
 
அரசியல்துறையினருக்கு சில முக்கிய பொறுப்புகள் மேலிடத்திலிருந்து கிடைக்கப்பெறும். பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் உங்களுக்கு சாதகமான சூழ்நிலையே அமையும். கலைத்துறையினர் தற்போது கிடைக்கும் ஊதியத்தை விட அதிக ஊதியத்திற்க்கான ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவீர்கள்.
 
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியில் எழுதும் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். இது நாள் வரை சரியான வேலை கிடைக்க வில்லையே என வருந்தி வந்தவர்களுக்கு அந்நிலை மாறி நல்ல வேலை கிடைக்கும். சிலர் ஒத்துழைப்பு நல்குவார்கள். 
 
திருவோணம்: இந்த குரு பெயர்ச்சியில் குடும்ப பொறுப்புகள் அதிகரிக்கும்.  பொறுமையை கடைபிடியுங்கள். குடும்பத்தாரின் ஆதரவு கிடைக்கும். நல்லபடியாக அனைத்து விஷயங்களையும் முடித்துக் கொடுப்பீர்கள். 
 
அவிட்டம் 1,2 பாதங்கள்: இந்த குரு பெயர்ச்சியில் அதிர்ஷ்டம் கிடைக்கும். திட்டமிட்டபடி அனைத்து காரியங்களும் வெற்றி பெறும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சிலர் உறுதுணையாக இருப்பார்கள். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். 
 
பரிகாரம்: தினமும் சூர்யபகவானை வழிபாடு செய்யுங்கள். சூரிய நம்ஸ்காரம் செய்யுங்கள்.