திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Updated : வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (13:23 IST)

கன்னி: ஆவணி மாத ராசி பலன்கள்

உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம் - அமைதியும், கருணையும் கொண்ட கன்னி ராசியினரே நீங்கள் அனைவரிடமும் நேசமுடன் பழகுவீர்கள். உழைப்பின் மூலம் உன்னத நிலையை அடைவீர்கள்.

இந்த மாதம் வீண் செலவுகள் குறையும். மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். அடுத்தவர்கள் கடனுக்கு  பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது.  எந்த ஒரு காரியமும் மந்தமாக நடந்தாலும்  நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். 
 
தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும்.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். 
 
குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது  நல்லது. அவர்களின் நலனுக் காக  செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில்   திடீர் இடை வெளி ஏற்படலாம். பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்களுக்காக செலவு செய்யவும் நேரிடும். 
 
பெண்களுக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். கலைத்துறையினருக்கு பணியாட்களின் ஒத்துழைப்பு  கிடைக்கும். புகழ் கிடைக்கும். சக கலைஞசர்கள் மூலம் சில தொந்தரவுகள் நேரிடலாம். அரசியல்துறையினர் தங்கள் இருப்பை மேலிடத்தில் சொல்வதற்கு ஏற்ற  காலகட்டம். புதிய உக்திகளைக் கையாண்டு அசத்துவீர்கள். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற மிகவும் கவனமாக படிக்க வேண்டி இருக்கும். 
 
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: சற்று ஏற்ற இறக்கமான பலன்களைப் பெறுவீர்கள். கூட்டுத் தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு எதிர்பார்த்த லாபத்தைவிட  குறைவாக கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய கெடுதிகள் ஏற்படாது. எல்லாம் இருந்தும் அனுபவிக்க முடியாதபடி  சுகவாழ்வு, சொகுசு வாழ்வில் பாதிப்பு உண்டாகும். 
 
அஸ்தம்: பொருளாதார நிலையில் சில இடையூறுகள் உண்டாகும். அசையும் அசையா சொத்துகளால் சிறு சிறு விரயங்கள் ஏற்படும். வீடு, மனை, வண்டி  வாகனங்களால் சுப செலவுகள் ஏற்படும். அடிக்கடி தூர பயணங்களை மேற்கொள்ளும் வாய்ப்பும் உண்டாகும். 
 
சித்திரை 1, 2, பாதங்கள்: சற்று அலைச்சல்கள், நெருக்கடிகள் உண்டாகும். சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். தொழில்  பொருளாதார ரீதியாக மேன்மை, குடும்பத்தில் திருமண சுப காரியங்கள் கைகூடும் வாய்ப்பு, கணவன் மனைவியிடையே ஒற்றுமை, புத்திர சிறப்பு, யாவும்  உண்டாகும். 
 
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 31, செப்டம்பர் 01
 
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 21, 22, 23
 
பரிகாரம்:  லட்சுமி வராஹப் பெருமாளை சேவித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கூடும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: புதன், வெள்ளி.