திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Updated : வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (12:15 IST)

மேஷம்: ஆவணி மாத ராசி பலன்கள்

அடக்கத்தோடும், அன்புடனும் பழகும் மேஷராசியினரே உங்களுக்கு தற்பெருமை இருக்கும். இந்த மாதம் ராசியாதிபதி செவ்வாய் ராசிக்கு தொழில் ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வது நன்மையை தரும். தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீர்கள். சகோதரர்கள் மூலம்  நன்மை உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி  இருக்கும். ராசிக்கு 4ல் ராகுவுடன் புதன் சேர்ந்து சஞ்சாரம் செய்வதால் புதிய வாகனங்கள் சேர்க்கை இருக்கும்.
தொழில், வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் தாமதம் ஏற்படலாம். புதிய ஆர்டர்கள் கிடைப்பதற்கு அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். 
 
குடும்பத்தில் இருப்பவர்களுடன் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். கணவன் மனைவிக்கிடையே சுமூக உறவு இருக்க விட்டு கொடுத்து செல்வது நல்லது. பிள்ளைகள் கல்வியில் அக்கறை காட்டுவீர்கள்.
 
பெண்களுக்கு மனத்துணிவு அதிகரிக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி திருப்திகரமாக இருக்கும். காரிய வெற்றிக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். அரசியல்துறையினர் வீண் குற்றச்சாட்டுகளில் இருந்து விடுபடுவீர்கள். கலைத்துறையினர் வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. 
 
மாணவர்களுக்கு:  கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது கவனம் தேவை.
 
அஸ்வினி: குடும்பத்தில் ஒற்றுமை, சுப காரியங்கள் நடைபெறும் வாய்ப்பு, பொருளாதார உயர்வு, கடன்கள் குறைய கூடிய அமைப்பு உண்டாகும். தேவையற்ற வம்பு வழக்குகள், மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் என்பதால் எதிலும் நிதானம் தேவை. பொருளாதார நிலை மிக சிறப்பாக அமையும். கூட்டுத்தொழில் செய்பவர்களுக்கு லாபமும் அபிவிருத்தியும் பெருகும். 
 
பரணி: கணவன் மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். பிரிந்து சென்ற உறவினர்களும் தேடிவந்து நட்புகரம் நீட்டுவார்கள். உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வது நல்லது. கை, கால் மூட்டுகளில் வலி, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாம். மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். 
 
கார்த்திகை 1ம் பாதம்: தம்பதிகளிடையே உண்டாகக் கூடிய கருத்து வேறுபாடுகளால் குடும்பத்தின் ஒற்றுமை குறையும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும்.  நண்பர்கள் உறவினர்களிடையேயும் பகைமை உண்டாகும். முடிந்த வரை பிறர் விஷயங்களில் தலையிடாமல் தவிர்த்து விடுவது நல்லது. 
 
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 19, 20 - செப்டம்பர் 15, 16
 
அதிர்ஷ்ட தினங்கள்: செப்டம்பர் 07, 08
 
பரிகாரம்: தேவி கருமாரியம்மனை வணங்கி வர எல்லா பிரச்சனைகளிலும் நல்ல தீர்வு கிடைக்கும். கஷ்டங்கள் நீங்கும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய், வியாழன்.