திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. மாதாந்த ஜாதகம்
Written By
Last Updated : வியாழன், 16 ஆகஸ்ட் 2018 (13:03 IST)

கடகம்: ஆவணி மாத ராசி பலன்கள்

புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம் - பார்வையாலேயே மற்றவர்களை பணிய வைக்கும் திறமை உடைய கடக ராசியினரே நீங்கள் சுறுசுறுப்பானவர்.  குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பவர். 
இந்த மாதம்  வருமானம் திருப்தி தருவதாக இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். வாகனங்களை  ஓட்டி செல்லும் போது கவனம் தேவை.  பொருட்களை கவனமாக பாதுகாத்துக் கொள்வது அவசியம். தனிமையாக இருக்க நினைப்பீர்கள். 
 
தொழில் வியாபாரம்  சுமாராக நடக்கும்.  ஆர்டர்கள் கிடைத்தாலும்  சரக்குகள் அனுப்புவது  தாமதமாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூல்  ஆனாலும்  எதிர்பார்த்தபடி இருப்பது சிரமம். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் மிகவும் கவனமாக  பணிகளை  மேற்கொள்வது நல்லது. பதவி உயர்வு, நிலுவையில் உள்ள  பணம் வருவது  தாமதப்படும்.
 
குடும்பத்தில் ஏதேனும் குழப்பம் ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே  கருத்து வேற்றுமை வந்து நீங்கும். உறவினர்களிடம் நிதானமாக  பேசுவது நல்லது.   பிள்ளைகளை அனுசரித்து செல்வது நன்மை தரும். 
 
பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.  பயணங்களின் போது உடமைகளை  கவனமாக  பார்த்துக் கொள்வது நல்லது. அரசியல்  துறையினர் திட்டமிட்ட எந்த பணிகளும் துரித கதியில் நடைபெறும். கலைத்துறையினருக்கு தொழிலில் இருந்த பிரச்சனைகள் அகலும். மாணவர்களுக்கு சக  மாணவர்களுடன் இருந்த மனவருத்தம்  நீங்கும். பாடங்கள் படிப்பதில் இருந்த தடைகள் நீங்கி ஆர்வமாக படிப்பீர்கள். 
 
புனர்பூசம் 4ம் பாதம்: உடல் நல பாதிப்புகளால் அடிக்கடி அவதிப்பட வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும். தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.  நல்ல நண்பர்களை தேர்ந்தெடுத்து பழகுவது சிறந்தது. மாணவர்கள் கல்வியில் அதிக ஈடுபாட்டுடன் செயல்பட்டால் மட்டுமே நல்ல மதிப்பெண்களைப் பெற  முடியும். 
 
பூசம்: எதிலும் எதிர் நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். வீண் பழிச் சொற்கள் உண்டாகலாம். தேவையற்ற இட மாற்றங்களால் அலைச்சல்கள்  அதிகரிக்கும். சொகுசு வாழ்விலும் பாதிப்பு ஏற்படும். ஆனாலும் எதையும் எதிர் கொள்ளும் பலம் உண்டாகும். 
 
ஆயில்யம்: உடல் ஆரோக்கியத்தில் நீங்கள் அதிக கவனம் எடுத்துக் கொள்வது நல்லது. பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் எதிர் நீச்சல் போட வேண்டி வரும். தொழில் வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டிகள் அதிகரிப்பதால் வாய்ப்புகள் கைநழுவும் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்து  செயல்படுவது நல்லது. 
 
சந்திராஷ்டம தினங்கள்: ஆகஸ்டு 26, 27, 28
 
அதிர்ஷ்ட தினங்கள்: ஆகஸ்டு 17, 18 - செப்டம்பர் 13, 14
 
பரிகாரம்: பிரத்தியங்கரா தேவியை  அர்ச்சனை செய்து வணங்கிவர எல்லா கஷ்டமும் நீங்கும். எதிர்ப்புகள்  அகலும்.
 
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், வியாழன்.