திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 18 ஏப்ரல் 2023 (05:30 IST)

எடுத்த காரியமெல்லாம் வெற்றியாகும் ராசிகள்! இன்றைய ராசிபலன் (18-04-2023)!

daily astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
 

மேஷம்:
இன்று கோபத்தை குறைத்துக் கொண்டு எல்லோரிடமும் நிதானமாக பேசுவது பிரச்சனை வராமல் தடுக்கும். மனோபலம் கூடும். மாணவர்களுக்கு கூடுதல் மதிப்பெண் பெற்று கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன்தரும். திறமை வெளிப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

ரிஷபம்:
இன்று வீண் அலைச்சல், காரியதாமதம் ஏற்படலாம். கவனம் தேவை. வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். தடை, தாமதம் ஏற்பட்டாலும் எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். 
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

மிதுனம்:
இன்று பயணங்கள் செல்ல நேரலாம். அடுத்தவர்களுக்கு நன்மை செய்யும் போது கவனமாக இருப்பது வீண் பிரச்சனைகள் வராமல் தடுக்கும். தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும்.  பழைய பாக்கிகள் வசூலாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

கடகம்:
இன்று புதிய ஆர்டர்கள் வருவது, புதிய வாடிக்கையாளர்கள்  வருவதும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு இல்லாதது போல்  தோன்றினாலும் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5.

சிம்மம்:
இன்று குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும்.  கணவன், மனைவிக்கிடையே  ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள்  நல்ல பலன் தரும்.  பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கன்னி:
இன்று தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். அடுத்தவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மனகுழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த குழப்பம் நீங்கி, பாடங்களை நம்பிக்கையுடன் படிப்பீர்கள். சகமாணவர்களிடம்  கவனமாக பழகுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

துலாம்:
இன்று தடைதாமதம் ஏற்படலாம். வீண் அலைச்சல் உண்டாகலாம். எச்சரிக்கையாக இருப்பது நல்லது.  பணவரத்து கூடும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எடுத்த காரியங்களை  வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

விருச்சிகம்:
இன்று அலைச்சல் இருக்கும். எதிர் பாராமல் நடக்கும் சம்பவங்களால் நன்மை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

தனுசு:
இன்று செலவு ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வழக்கத்தை விட பணிசுமை  கூடும். குற்றச்சாட்டுக்கு ஆளாகாமல் பணிகளை கவனிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மகரம்:
இன்று குடும்பத்தில் இருந்த சிறுசிறு பிரச்சனைகள் தீரும். உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள்.  பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கும்பம்:
இன்று பணவரத்து திருப்தி தரும். எதிர்பாராமல் நடக்கும் காரியங்களால் நன்மை உண்டாகும்.  மாணவர்கள்  கவனத்தை சிதற விடாமல் ஒருமுகப்படுத்தி பாடங்களை படிப்பதால் நன்மை உண்டாகும்.  மதிப்பெண் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்:
இன்று வீண் அலைச்சல் காரிய தாமதம் உண்டாகலாம்.  கவனமாக செயல்படுவது நல்லது.  எதிர்ப்பு கள் நீங்கும். எந்த சூழ்நிலையையும் எதிர்கொண்டு தலைமை தாங்கி நடத்தும் திறமை மேலோங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9