திங்கள், 23 டிசம்பர் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. தினசரி ஜாதகம்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 17 ஏப்ரல் 2023 (05:30 IST)

இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் அடிக்க போகுது! இன்றைய ராசிபலன் (17-04-2023)!

daily astro
இன்று உங்களுடைய ராசியின்படி உங்களுக்கான நாள் எப்படி இருக்கிறது என்று தெரிந்துக்கொள்ளுங்கள்.
 

மேஷம்:
இன்று பணவரத்து கூடும். அரசாங்கம் மூலம் லாபம் உண்டாகும். நீண்டதூர பயணங்களால் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி விறுவிறுப்படையும். வசூலாக வேண்டிய கடன் பாக்கிகள் வசூலாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

ரிஷபம்:
இன்று தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான கஷ்டங்கள் குறையும். குடும்பத்தில் மரியாதை கூடும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

மிதுனம்:
இன்று கணவன், மனைவிக்கிடையில் மனம்விட்டு பேசி எடுக்கும் முக்கிய முடிவுகள் நன்மை தரும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். கடிதம் மூலம் வரும் தகவல்கள் நல்ல தகவல்களாக இருக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரும். கஷ்டங்கள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கடகம்:
இன்று மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமாக பலன் தரும். எதிலும் வேகமாக செயலாற்ற வேண்டும் என்ற எண்ணம் தோன்றும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

சிம்மம்:
இன்று எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிர் பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். புகழ் கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் காரியங்களால் முன்னேற்றம் கிடைக்கும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். 
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கன்னி:
இன்று முக்கிய நபர்களின் உதவியும் அவசியமான நேரத்தில் ஆலோசனையும் கிடைக்க பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரம் மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபார வளர்ச்சிக்கு தேவையான உதவிகள் எதிர்பார்த்த இடங்களில்  இருந்து வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9.

துலாம்:
இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலை தொடர்பாக பயணம் செல்ல நேரலாம். அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் சுமூக மானநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனகசப்பு மாறும். 
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

விருச்சிகம்:
இன்று பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். தேவையான நேரங்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

தனுசு:
இன்று மாணவர்களுக்கு  கல்வியில் இருந்த தேக்க நிலை மாறி ஆர்வமுடன் சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள். காரியங்களில் தடை நீங்கும். வாழ்க்கை வளம் பெறும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மகரம்:
இன்று மரியாதையும், அந்தஸ்தும் கூடும். எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். திடீர் கோபம் வரலாம். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் சமாளிக்கும் மனோ தைரியம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கும்பம்:
இன்று தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். எந்த சிக்கலும் வராமல் இருக்க தீர ஆலோசனை செய்து முடிவு கள் எடுப்பீர்கள்.  பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமை வெளிப்பட்டு அதனால் பாராட்டும் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

மீனம்:
இன்று குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நெருக்கத்தை அதிகரிக்கச் செய்யும். பிள்ளைகள் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்வார்கள். அக்கம் பக்கத்தினரிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9