திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (15:07 IST)

புலிகள் அமைப்பை மீண்டும் உருவாக்க முயற்சியா? – இலங்கையில் மேயர் கைது!

இலங்கையில் விடுதலை புலிகள் அமைப்பை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் செயல்பட்டதாக யாழ்பாணம் மேயர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையில் நடைபெற்ற போர் முடிவுக்கு வந்த நிலையில் விடுதலை புலிகள் அமைப்பு தடை செய்யப்பட்ட அமைப்பாக இலங்கை உள்ளிட்ட சில நாடுகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் யாழ்பாணம் மாநகர மேயராக உள்ள விஸ்வலிங்கம் மணிவண்ணன் புலிகள் அமைப்பை மீட்டுருவாக்கம் செய்யும் வகையில் செயல்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்பாணம் நகராட்சி ஊழியர்களுக்கான சீருடையை புலிகளின் சீருடை போலவே வடிவமைத்ததற்காக குற்றம்சாட்டப்பட்டு அவர் சிறையிலடைக்கப்பட்டுள்ளார்.<span style="font-family: &quot;" ","serif";mso-bidi-font-family:"nirmala="" ui"'="">