திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva

வைகோ பேசுவது வேடிக்கையான நகைச்சுவை: காயத்ரி ரகுராம் டுவீட்

இலங்கை தமிழர்களுக்கு பிரதமர் மோடி துரோகம் செய்வதாக வைகோ இன்று ஆவேசமாக தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசியுள்ளதை அடுத்து வைகோவிற்கு பாஜக பிரமுகர் காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் பதிலடி கொடுத்துள்ளார் அவர் கூறியிருப்பதாவது. அவர் கூறியிருப்பதாவது:
 
ஒன்னரை இலட்சம் ஈழத்தழிழர்களை கொன்று குவித்தது சோனியாவின் காங்கிரஸ் தான்,ராஜபக்சேவுடன் கைகோர்த்து கொண்டு ஈழ தமிழர்களின் ரத்தத்தை குடித்தது காங்கிரஸ் ,, அதற்கு  திமுகவும் துணை போனது  என இது நாள் வரை  பேசிவிட்டு, தற்போது உங்கள் சுய நலத்திற்காக ஒன்னரை இலட்சம்  ஈழ தமிழர்களை  கொன்று குவித்த காங்கிரஸ் மற்றும்  திமுக வோடு கூட்டணி சேர்ந்து கொண்டு,  மோடி ஈழ தமிழர்களுக்கு எதிராக செயல்படுகிறார்  என வைகோ பேசுவது வேடிக்கையான நகைச்சுவை..
 
உங்களை போன்ற   ஈழ   துரோகிகளை உலக தமிழர்கள் அடையாளம் கண்டு விட்டார்கள், சுய நலத்திற்காக  மாற்றி மாற்றி பேசும் உங்களை ஈழ தமிழர்களின் ஆன்மா கூட மன்னிக்காது, மோடி ஈழ தமிழர்களை காப்பாற்றுவார்.விடியல் தருவார் ஈழ பிரச்சனை எங்களுக்கு வியாபாரம்   அல்ல உணர்வு.