புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2017 (21:09 IST)

ஃபேஸ்புக்கில் பதிவிட்ட 20 மணி நேரத்தில் தேடி வந்த வீடு, சோறு

இங்கிலாந்தைச் சேர்ந்த ஒருவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வசிப்பதற்கு விடு வேண்டும் என்று பதிவிட்டுள்ளார். அதற்கு பல்வேறு தரப்பினரும் உதவிகளை செய்துள்ளனர்.


 

இங்கிலாந்தைச் சேர்ந்த மைக்கேல் பீக்ஸின் என்பவர் 8 மாதங்களுக்கு முன்பு சிறையில் இருந்து விடுதலையகி வெளியே வந்துள்ளார். இவருக்கு வேலை மற்றும் தங்குமிடம் கிடைக்காததால் சாலை ஓரத்தில் வசித்து வந்துள்ளார். 
 
ஷான் என்பவர் இவரிடம் பேசி இவரைப் பற்றிய தகவல்களை சேகரித்துள்ளார். அதன் பின்னர் யாரேனும் உதவி செய்ய மாட்டார்களா என நினைத்து தனது முகநூல் பக்கத்தில் மைக்கேல் குறித்த தகவல்களை பதிவிட்டுள்ளார். மேலும் அவருக்கு வேலை மற்றும் தங்குவதற்கு வீடு வேண்டும் என்றும் தெரிவித்தார்.
 
இதனை பார்த்த பலரும் அவருக்கு முன் வந்துள்ளனர். சமூக ஆர்வலர் ஒருவர் தனது வீட்டிலேயே தங்குவதற்கு இடவசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளார். பலரும் பல்வேறும் உதவிகளை செய்து வருகின்றனர். இவை அனைத்தும் முகநூலில் பதிவிட்ட 20 மணி நேரத்திற்குள் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.