1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 26 ஜூன் 2018 (15:30 IST)

வர்த்தக போர்: சொந்த நாட்டை விட்டு வெளியேறும் ஹார்ட்லி டேவிட்சன்?

வரி விவகாரத்தில் சீனா, இந்தியா போன்ற நாடுகளை அமெரிக்கா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இதனால் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே வர்த்தக போர் துவங்கியுள்ளது. இரு நாடுகளும் வரிகளை உயர்த்தப்போவதாக எச்சரிக்கை விடுத்துவருகின்றன. 
 
இதுபோல ஐரோப்பிய நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இரும்பு, அலுமினியம் போன்றவற்றிற்கான வரியை டிரம்ப் உயர்த்தினார். இதற்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றிக்கான வரியை ஐரோப்பிய நாடுகள் உயர்த்தின.
 
இந்த வர்த்தக்க போரால் அதிகம் பாதிக்கப்படுவது அமெரிக்க தொழில் நிறுவனங்களே. எனவே, இதன் விளைவாக அமெரிக்காவின் ஹார்ட்லி டேவிட்சன் நிறுவனம் தனது தொழிற்சாலைகளை அமெரிக்காவில் இருந்து வேறு நாடுகளுக்கு மாற்ற முடிவு செய்துள்ளது. 
 
இது குறித்து அதிபர் டிரம்ப் பின்வருமாறு பதிவிட்டுள்ளார். ஹார்ட்லி டேவிட்சன் வெள்ளைக்கொடி காட்டுகிறது. எனக்கு ஆச்சரியமாக உள்ளது. அவர்களுக்காகதான் நான் போராடுகிறேன். அந்த நிறுவனம் அதிகமான வரி கொடுக்க வேண்டிய சூழல் எழாது என கூறியுள்ளார்.