ராணுவ தொப்பியில் கம்யூனிசம் பற்றிய வாசகம்: அமெரிக்கா அதிரடி நடவடிக்கை!

Last Updated: வியாழன், 21 ஜூன் 2018 (15:51 IST)
அமெரிக்கா ராணுவ வீரர் தனது தொப்பியில் கம்யூனிசம் வெல்லும் என தனது ராணுவ தொப்பியில் கம்யூனிசம் வெல்லும் என எழுதி காரணத்தினால் ராணுவ வேலையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 
26 வயதான ஸ்பென்சர் ரபோன் அமெரிக்காவின் வெஸ்ட் பாய்ண்ட் ராணுவப் பயிற்சி மையத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு தனது பயிற்சியை முடித்திருக்கிறார். 
 
அவரது பட்டமளிப்பு விழாவில் புரட்சியாளர் சேகுவேரா உருவம் பொறித்த உடையை அணிந்தும், தனது சீருடைக்கு அளிக்கப்பட்ட தொப்பியில் கம்யூனிசம் வெல்லும் என்று எழுதப்பட்டு இருந்த தொப்பியோடு புகைப்படம் எடுத்திருக்கிறார்.
 
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதனை தொடர்ந்து ஸ்பென்சர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அமெரிக்க அரசு ஸ்பென்சர் ரபோனை ராணுவத்திலிருந்து நீக்கியுள்ளது.
 
ராணுவத்திலிருந்து நீக்கப்பட்ட ஸ்பென்சர் ரபோனுக்கு சமூக வலைதளங்களில் பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். மேலும், சிகாகோவில் நடைபெறவுள்ள சோசியலிசம் 2018 மாநாட்டில் அவர் உரையாற்றவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 


இதில் மேலும் படிக்கவும் :