செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: சனி, 12 நவம்பர் 2022 (22:29 IST)

உக்ரைனுக்கு ரூ.3,238 கோடிக்கு அமெரிக்கா ராணுவ உதவி!

உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா மீண்டும் ராணுவ உதவிகள் செய்யவுள்ளதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

உக்ரைன்  நாட்டின் மீது உலகப் பெரும் வல்லரசான ரஷியா தொடர்ந்து போரிட்டு வருகிறது. ஒன்பது மாதங்களாக  இப்போர் நடந்து வரும் நிலையில், சமீபத்தில், உக்ரைனில் சில பகுதிகளை தங்கள் பிராந்தியத்துடன் ரஷ்யா இணைத்துக்கொண்ட  நிலையில், உக்ரைனின் கெர்சன் பகுதியில் இருந்து ராணுவத்தினரை வெளியேறும்படி ரஷிய அதிபர் உத்தரவிட்டார். எனவே ரஷிய படைகள் கெர்சன் நகரில் இருந்து வெளியேறிய பின், கெர்சன் நகர் உக்ரைன் ராணுவத்தினர் கட்டுப்பாட்டில் வந்துள்ளதால்  உக்ரைன் கொடியை ஏற்றினர்.

இந்த நிலையில், ரஷியா என்ற பெரிய நாட்டை எதிர்த்துப் போரிட உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகள் நிதி மற்றும் ஆயுத உதவிகள் செய்து வருகின்றனர்.

இந் நிலையில், அமெரிக்க நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேல் சல்லிவன், உக்ரைனுக்கு 400 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவிகள் செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளார். இது, இந்திய  இந்திய மதிப்பில் ரூ.3.238 கோடி ஆகும்.

ஏற்கனவே அமெரிக்கா, உக்ரைனுக்கு  நிதி உதவி அளித்திருந்த நிலையில், இந்த உதவிகள் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

Edited by Sinoj