வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 13 ஜூன் 2019 (19:48 IST)

பிரியங்கா சோப்ராவுக்கு மனிதாபிமான விருது – யுனிசெஃப் அறிவிப்பு

இந்திய நடிகையும், குழந்தைகள் உரிமைக்கான கௌரவ தூதராகவும் உள்ள பிரியங்கா சோப்ராவுக்கு மனிதாபிமான விருதை வழங்க முடிவு செய்திருக்கிறது யுனிசெஃப் அமைப்பு.

குழந்தைகள் நல அமைப்பான யுனிசெஃப் நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளுக்கு கல்வி,சுகாதாரம் மற்றும் உரிமைகளை ஏற்படுத்த உருவான அமைப்பாகும். இந்த அமைப்பில் 2006 ல் இணைந்த நடிகை பிரியங்கா சோப்ரா அன்று முதல் குழந்தைகள் உரிமைகளுக்காக தொடர் குரல் கொடுத்து வருகிறார். உலகம் முழுவதும் உள்ள குழந்தைகள் நலனுக்கான தூதராக நியமிக்கப்பட்ட பிரியங்கா சோப்ராவின் சிறப்பான செயல்பாட்டுக்காக டேனி காய் விருது வழங்கி சிறப்பிக்கவிருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி டிசம்பரில் அமெரிக்காவில் நடைபெற உள்ளது.

இதுபற்றி பிரியங்கா சோப்ரா தனது ட்விட்டரில் “மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. டேனி காய் விருது வழங்கி என்னை கௌரவப்படுத்தியதற்கு நன்றி. குழந்தைகளுக்காக நான் செய்யும் இந்த சேவை மற்ற எல்லாவற்றையும் விட முக்கியமானது. ஒவ்வொரு குழந்தையின் வளமான எதிர்காலத்திற்கும், கல்விக்கும் இந்த விருது போய் சேரட்டும்” என தெரிவித்துள்ளார்.