பட ஸ்டைலில் மீன்களுக்கு தளபதியை உணவாக கொடுத்த கொரிய அதிபர்
கொரிய அதிபர் தன் தளபதியை கொன்று, அவரது உடலை மீன்களுக்கு உணவாக அளித்தார் என்று கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. சென்ற சில ஆண்டுகளில் வடகொரிய உலக நாடுகளின் எச்சரிக்கையை மீறி பல்வேறு விதமான ஏவுகணை சோதனைகளில் ஈடுபட்டது. அமெரிக்கா இதை கண்டித்து வட கொரியா மீது பொருளாதார தடை விதித்தது. பிறகு அதிகாரிகள் சிலர் வட கொரிய அதிபர் கிம் ஜாங் வுன்-னிடம் பேசி அமெரிக்காவுடன் சமாதான பேச்சு வார்த்தை நடத்த ஒப்புக்கொள்ள வைத்தனர்.
இதன் முதல் கட்ட பேச்சுவார்த்தை சிங்கபூரிலே கொரிய அதிபர் கிம் ஜாங் வுன்னுக்கும், அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கும் இடையே நடைபெற்றது. முதல் கட்ட பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எடுக்கப்படாததால் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை வியட்நாமில் நடைபெற்றது. இதில் கிம்-ட்ர்ம்ப் இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவர் நேராகவே திட்டி கொண்டனர். ட்ரம்ப் பேச்சு வார்த்தை முடியும் முன்னரே வெளியேறினார்.
இதில் ஆத்திரமடைந்த கிம் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்த அதிகாரிகள் 5 பேரை சுட்டு கொன்றார். இது உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது கிம்மின் முக்கிய தளபதிகளில் ஒருவரை கொன்று அவர் வீட்டில் வளர்க்கும் பிராணா மீன்களுக்கு உணவாக போட்டுவிட்டதாக கூறப்படுகிறது.
ஜேம்ஸ்பாண்ட் படம் ஒன்றில் வில்லன் தனக்கு பிடிக்காதவர்களை தான் வளர்க்கும் சுறா மீன்களுக்கு இரையாக்கி விடுவார். கிம் ஜாங் வுன்னின் செயல்பாடு அந்த படத்தை நினைவுப்படுத்துவது போல் உள்ளது.