வியாழன், 5 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2024 (13:30 IST)

உலகின் மிக மோசமான குற்றவாளியை மோடி கட்டிப்பிடிப்பதா? உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி

உலகின் மிக மோசமான குற்றவாளி ரஷ்ய அதிபர் புதின் என்றும் அவரை இந்திய பிரதமர் மோடி கட்டிப்பிடிப்பது ஏமாற்றம் அளிப்பதாக உக்ரைன் அதிபர் கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி நேற்று அரசு முறை பயணமாக ரஷ்யா சென்ற நிலையில் அங்கு அவருக்கு பிரம்மாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது என்பதும் முப்படைகள் அவருக்கு வரவேற்பு கொடுத்தது என்பது தெரிந்தது.

மேலும் அவர் இன்று புதினுடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கும் நிலையில், புதினை சந்தித்த அவர் அவரை கட்டிப்பிடித்து தனது வணக்கத்தை தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ’மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் தலைவர் பிரதமர் மோடி, மாஸ்கோவில் உலகின் மிக மோசமான குற்றவாளியை கட்டிப்பிடித்தது மிகவும் ஏமாற்றமாகவும் அமைதியின் மீது விழுந்த அடியை போலவும் இருக்கிறது என்று உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.

இன்று கூட ரஷ்யாவின் ஏக்குதலா ஏவுகணை தாக்குதல் காரணமாக 13 குழந்தைகள் உட்பட 37 பேர் கொல்லப்பட்டனர் என்றும் குழந்தைகள் மருத்துவமனையில் மனசாட்சியே இல்லாமல் ரஷ்யா ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் இத்தாலியில் நடந்த ஜி 7 மாநாட்டில் உக்ரைன் அதிபர் ஸெலென்ஸ்கி பிரதமர் மோடி சந்தித்த நிலையில் இன்று அவர் புதன் சந்திப்பு குறித்து ஏமாற்றத்தை வெளிப்படுத்தி உள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva