1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 30 ஜனவரி 2023 (09:35 IST)

நான் வந்தா 24 மணி நேரத்துல ரஷ்யா பிரச்சினை க்ளோஸ்! – டொனால்டு ட்ரம்ப் பேச்சு!

அமெரிக்க முன்னாள் அதிபரான டொனால்ட் ட்ரம்ப் தான் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ரஷ்யா பிரச்சினையை 24 மணி நேரத்தில் தீர்ப்பேன் என பேசியுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த 2020 வரை தொடர்ந்து இரண்டு முறை டொனால்டு ட்ரம்ப் அதிபராக பதவி வகித்து வந்தார். அப்போதைய காலக்கட்டத்தில் சர்ச்சைக்குரிய மெக்சிகோ சுவர் உள்ளிட்ட பல நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டார். இந்நிலையில் 2020ல் நடந்த அதிபர் தேர்தலில் ட்ரம்ப்பை தோற்கடித்து ஜோ பைடன் அதிபராக பொறுப்பேற்றார்.


அதை தொடர்ந்து அதுகுறித்து விமர்சனங்கள் வைத்த ட்ரம்ப்பின் ட்விட்டர், யூட்யூப் பக்கங்கள் முடக்கப்பட்டன. சமீபத்தில் அவை மீதான தடை மீண்டும் நீக்கப்பட்டுள்ளது. மேலும் அடுத்த 2024ம் ஆண்டு நடைபெற உள்ள அதிபர் தேர்தலுக்காக டொனால்டு ட்ரம்ப் தயாராகி வருகிறார்.

இந்நிலையில் கொலம்பியாவில் நடந்த ஒரு நிகழ்வில் பேசிய ட்ரம்ப் “அதிபர் ஜோ பைடன் அமெரிக்காவை மூன்றாம் உலகப்போரின் விளிம்பிற்கு கொண்டு வந்துவிட்டார். நான் மீண்டும் அதிபரானால் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி 24 மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தம் செய்து காட்டுவேன்” என கூறியுள்ளார்.

Edit by Prasanth.K