1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 8 மே 2018 (12:52 IST)

சிங்கப்பூரில் சந்திக்கிறார்களா டிரம்ப்- கிம் ஜாங் உன்?

வட கொரியா அதிபரான கிம் ஜாங் உன்னும் அமெரிக்க அதிபர் டிரம்பும் சிங்கப்பூரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் அணு ஆயுத சோதனை மூலம் அமெரிக்காவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்தார். இதனால் இரு நாடுகளுக்கும் மத்தியில் மோதல் போக்கு நிலவி வந்தது. ஆனால், தென் கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு பின்னர் நிலைமை தலைகீழாக மாறி விட்டது. இரு கொரிய நாடுகளுக்கு இடையே மட்டுமின்றி, வட கொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயும் இணக்கமான சூழல் உருவாகி வருகிறது.
 
இதில் ஒரு முக்கிய பங்காக வடகொரிய அதிபர் கிம் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை சந்திப்பதாக தெரிவித்தார். மேலும், வடகோரியாவில் அணு ஆயுத சோதனை முற்றிலும் நிறுத்தப்படும் என அறிவித்தார். அவரின் இந்த அறிவிப்பிற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்பு தெரிவித்தார்.
 
இந்த நிலையில் டிரம்பு, கிம் சந்திப்பு ஜூன் மாதத்தில் நடப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் இருவரும் சிங்கப்பூர் நாட்டில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக கூறப்படுகிறது.