திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: சனி, 14 ஜூலை 2018 (10:38 IST)

டிரம்ப்-ராணி எலிசபெத் சந்திப்பு: தனிப்பட்ட சந்திப்பு என தகவல்

அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிபராக பதவியேற்ற பின்னர் முதல்முறையாக பிரிட்டன் சென்றுள்ளார். அங்கு அவர் இரண்டாம் ராணி எலிசபெத் அவர்களை சந்தித்து பேசியுள்ளார். டிரம்புடன் அவரது மனைவி மெலினாவும் ராணி எலிசபெத்தை சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது, 'அமெரிக்க அதிபர் டிரம்பின் பிரிட்டன் பயணம் அரசுமுறை பயணம் அல்ல என்றும், இது அவருடைய தனிப்பட்ட முறையிலான பயணம் என்றும், ராணி எலிசபெத்துடன் டிரம்ப் சந்தித்தது மரியாதை நிமித்தமாகவே என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
அமெரிக்க அதிபரின் இந்த பயணம் அரசுமுறை பயணமாக இல்லாமல் இருந்தாலும் அவருக்கு ராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் ராணி எலிசபெத் அவர்களுடன் டிரம்ப் சுமார் 25 நிமிடங்கள் மட்டுமே பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது