புதன், 27 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 17 மே 2018 (19:57 IST)

ஆபாசப் பட நடிகையின் கூற்றை மெய்பிக்கும் டிரம்ப்!

கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம்.
 
பேச்சுவார்த்தை நடைபெறும் என அமெரிக்கா நம்பிக்கை:
அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையை ரத்து செய்யப் போவதாக வட கொரியா தெரிவித்திருந்த நிலையிலும் பேச்சுவார்த்தை நடைபெறும் என டிரம்பின் நிர்வாகம் நம்புகிறது.
 
பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தயாராக இருப்பதாக வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். அணு ஆயுதங்களை கைவிடுமாறு அமெரிக்கா வலியுறுத்தினால், பேச்சுவார்த்தையை ரத்து செய்து விடுவதாக வட கொரியா தெரிவித்திருந்தது.
 
மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த பேச்சுவார்த்தை ஜூன் மாதம் 12ஆம் தேதி நடைபெறவுள்ளது. ''கூட்டம் நடைபெறுவதாக இருந்தால் அதிபர் தயாராக இருக்கிறார்'' என வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் தெரிவித்துள்ளார்.
 
''அப்படி நடக்கவில்லையெனில், தற்போது நடந்து கொண்டிருக்கும் அதிகபட்ச அழுத்தம் தரும் பிரசாரத்தை தொடர்வோம்'' என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
ஆபாசப் பட நடிகையின் கூற்றை மெய்பிக்கும் டிரம்ப்:
தனது வழக்கறிஞருக்கு, 1,00,000 டாலர்களுக்கும் அதிகமாக பணம் வழங்கியதை அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வமாக ஒப்புக் கொண்டுள்ளார்.
 
அமெரிக்காவின் அரசு நெறிமுறைகளுக்கான அலுவலகம் வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில், டிரம்பின் வழக்கறிஞர் மைகல் கோஹெனிற்கு எதற்காக பணம் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடவில்லை. அது செலுவு கணக்கில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக ஆபாச பட நடிகையான ஸ்டார்மி டேனியல்ஸுக்கு 130,000 டாலர்களுக்கு மேலாக பணம் வழங்கியதாக டிரம்ப் வழக்கறிஞர் ஒப்பு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.