செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: சனி, 23 செப்டம்பர் 2017 (08:22 IST)

வடகொரியா அதிபர் ஒரு பைத்தியகாரன்: டுவிட்டரில் டிரம்ப் அதிரடி

அமெரிக்க அதிபர் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் அவர்களும் டுவிட்டரில் நம்மூர் அஜித், விஜய் ரசிகர்கள் போல் மோதிக்கொண்டு வருவது உலக நாடுகளை ஆச்சரியப்படுத்தியுள்ளது.



 
 
அமெரிக்கா மன சோர்வு அடைந்துவிட்டது. அதன் தலைவர் ஒரு வயதான முதியவர், குரைக்கும் நாய் கடிக்காது என்று கிம் ஜான் உன் தனது டுவிட்டரில் கூஉறினார். மேலும் வடகொரியாவிற்கு மிரட்டல் விடுக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மனநலம் சரியில்லாதவர் என்றும் விமர்சித்தார்.
 
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில்அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது டுவிட்டரில் கூறியதாவது: "வடகொரியா அதிபர் ஒரு பைத்தியகாரன், அவரது செயல்பாடு மூலம் தன்நாட்டு மக்களையே பட்டினி போட்டு கொன்று விடுவார். இது தான் அந்த நாட்டில் நடக்கபோகிறது. முன் எப்போதும் போல் இல்லாத அளவிற்கு அவரை சோதிப்போம்", என்று கூறியுள்ளார். டுவிட்டரில் இருவரும் மோதுவதை மற்ற நாட்டின் தலைவர்கள் ஆச்சரியமாக கவனித்து வருகின்றனர்.