1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Updated : வெள்ளி, 22 செப்டம்பர் 2017 (05:58 IST)

உலக சாதனை நிகழ்த்த ரூ.3கோடியா? மெர்சல் சர்ச்சை

இளையதளபதி விஜய் நடித்த 'மெர்சல்' திரைப்படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகி சரியாக 10 மணிக்கு 6 லட்சம் லைக்குகளை பெற்று உலக சாதனை செய்துள்ளது. இந்த டீசரின் சாதனையை பார்த்து உலகமே வியப்படைந்து உள்ளது.



 
 
இந்த நிலையில் டுவிட்டரில் ஒருவர் யூடியூப் மற்றும் டுவிட்டரில் டிரெண்ட் மற்றும் உலக சாதனை லைக்ஸ்களுக்காக ரூ.3 கோடி செலவு செய்யப்பட்டிருப்பதாக சர்ச்சைக்குரிய டுவீட் செய்துள்ளார்.
 
இது எந்த அளவுக்கு உண்மை என்பது அந்த கடவுளுக்கே வெளிச்சம். ஆனால் இதையெல்லாம் கண்டுகொள்ளாமல் தங்கள் தலைவரின் உலக சாதனையை விஜய் ரசிகர்கள் தீபாவளி போல கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.