வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 16 ஜூலை 2018 (19:08 IST)

தாய்லாந்து மீட்புப் பணியில் உயிரிழந்த வீரருக்கு அஞ்சலி!

வெள்ளம் சூழ்ந்த தாய்லாந்து குகையில் 17 நாள்கள் சிக்கியிருந்து சர்வதேச உதவியுடன் நடந்த மிகப்பெரிய மீட்பு நடவடிக்கை மூலம் காப்பாற்றப்பட்ட 12 சிறுவர்களும், அவர்களது கால்பந்து பயிற்சியாளரும், மீட்புப் பணியில் உயிரிழந்த வீரருக்கு அஞ்சலி செலுத்தினர்.
 
வெள்ளம் சூழ்ந்த குகையில் சுமார் 1 கி.மீ. ஆழத்தில் சிக்கிக் கொண்ட இவர்களுக்கு, மீட்பு நடவடிக்கைக்கு முன்னதாக, ஆக்சிஜன் சிலிண்டர்களை கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்ட தாய்லாந்து கடற்படையைச் சேர்ந்த முக்குளிக்கும் வீரர் சமன் குணன், திரும்பிவரும்போது தனது சிலிண்டரில் ஆக்சிஜன் தீர்ந்துபோனதால் உயிரிழந்தார்.
 
மீட்கப்பட்ட பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் இந்த 13 பேரும் சமன் குணனுக்கு மருத்துவமனையிலேயே அஞ்சலி செலுத்தினர்.