ராஜபக்ஷேவை சந்திக்கின்றனர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்..
13 ஆவது சட்ட திருத்தம் தொடர்பாக இலங்கை அதிபர் கோத்தப்பய ராஜபக்ஷேவை தமிழ் தேசிய கூட்டமைப்பு சந்திக்கவுள்ளதாக திட்டம்
கடந்த 1987 ஆம் ஆண்டு இலங்கை-இந்தியா இடையே இலங்கை தமிழர்களுக்கான அதிகாரப்பகிர்வு வழங்குவது தொடர்பாக ஒப்பந்தம் போடப்பட்டு 13 ஆவது சட்டத் திருத்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் இந்த சட்டத்திருத்தத்தை அந்நாட்டினர் எதிர்த்ததால் இலங்கை அரசு அதனை அமல்படுத்தவில்லை.
இதனிடையே சமீபத்தில் இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் கோத்தப்பய ராஜபக்ஷே வெற்றி பெற்று அதிபராக பொறுப்பேற்றார். இந்நிலையில் 13 ஆவது சட்டத் திருத்தம் தொடர்பாக தமிழ் தேசிய கூட்டமைப்பு, இலங்கை அதிபர் கோத்தப்பய ராஜபக்ஷேவை சந்திக்க திட்டமிட்டுள்ளது.
சமீபத்தில் இந்தியா வந்த கோத்தப்பய ராஜபக்ஷே, சிங்களவர்களிடம் ஒருமித்த கருத்து நிலவாமல் சட்டத்திருத்தத்தை அமல்படுத்தமுடியாது என பேட்டியளித்தது குறிப்பிடத்தக்கது.