செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 6 டிசம்பர் 2019 (08:39 IST)

டிரம்ப் பதவி நீக்க தீர்மானம்: நாடாளுமன்றம் ஒப்புதல்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு எதிராக கொண்டு வரப்பட்ட பதவி நீக்க தீர்மானத்திற்கு அமெரிக்கா நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது பதவியை அரசியல் எதிரிகளை பழிவாங்க தவறாக பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதனையடுத்து டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க பிரமாணம் கொண்டுவரப்பட்டது.

இதனை தொடர்ந்து டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானத்தை பிரதிநிதிகள் அவைக்கு கொண்டுவரவுள்ளதாக நேற்று கூறப்பட்ட நிலையில் தற்போது அவரின் பதவி நீக்க தீர்மானத்திற்கு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபாநாயகர் நான்சி பொலோசி அனுமதித்துள்ளார். எனினும் டிரம்பிற்கு ஆதரவாளர்கள் அதிகம் உள்ளதால் இந்த தீர்மானம் தோல்வியில் முடியும் என கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.