இந்த ஆண்டின் சிறந்த நபர் க்ரேட்டா தன்பெர்க்! – டைம் இதழ் கவுரவம்!
பருவநிலை மாற்றம் குறித்து தொடர்ந்து போராட்டத்தை முன்னிறுத்தி வரும் சிறுமி க்ரேட்டா தன்பெர்க்கிற்கு இந்த ஆண்டின் சிறந்த நபர் என்ற கவுரவத்தை வழங்கியுள்ளது ‘டைம்’ இதழ்.
ஸ்வீடன் நாட்டு பள்ளி சிறுமியான க்ரேட்டா தன்பெர்க் பருவநிலை மாற்றத்தால் மக்கள் அழிய போகும் ஆபத்தை உலகுக்கு உணர்த்த தனது போராட்டத்தை ஸ்வீடன் நாடாளுமன்றம் முன்னாள் தொடங்கினார். தற்போது ஐ.நா வரை தனது குரலை ஒலிக்க செய்து உலகின் கவனத்தை தன் பக்கம் திருப்பியுள்ளார் சிறுமி க்ரேட்டா.
தொடர்ந்து பருவநிலை மாற்றம் குறித்து அக்கறை காட்டாத உலக தலைவர்களை கண்டித்து வரும் க்ரேட்டா, அறிவியலாளர்கள் ஆலோசனைகளை கேட்டு உலகை காக்க வழி செய்ய வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்து வருகிறார்.
ஆண்டுதோறும் அந்த ஆண்டில் பெரும் சாதனை புரிந்த நபர் ஒருவரை தேர்ந்தெடுத்து “Person Of The Year” என்ற பெயரில் அவர்களை அட்டைப்படத்தில் இடம்பெற செய்து கௌரவித்து வருகிறது பிரபல டைம் இதழ். இந்த ஆண்டிற்கான நபராக டைம் இதழ் க்ரேட்டா தன்பெர்கை தேர்வு செய்துள்ளது.