1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : வியாழன், 14 நவம்பர் 2019 (19:45 IST)

கண்ணில் வழியும் ரத்தம் ....துபாயில் மனைவியை கொடூரமாக அடித்த இந்தியர் ! வைரல் வீடியோ

ஐக்கிய அரபு எமிரேட்ஸ் எனப்படும் துபாயில், கணவரா தாக்கபட்டு கண்களில் ரத்தம் வழியும் பெண்ணை போலீஸார் மீட்டு, கணவனை கைது செய்துள்ளனர்.  இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்த ஜாஸ்மின் சுல்டான் (33) என்பவர் தனது கணவர் முகமது கிஷார் (47)மற்றும் குழந்தைகளுடன் துபாயில் வசித்து வருகிறார். 
 
இந்நிலையில், இவர் இன்று தனது டுவிட்டர் பக்கத்தில் கண்ணில் ரத்தம் வழிய ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், தனது கணவர் தன்னை அடித்து துன்புறுத்துவதாக தெரிவித்துள்ளார்.
 
மேலும், தான் இந்தியா திரும்புவதற்குக் கேட்டால் என்னை கணவர் அடித்து துன்புறுத்தி வருகிறார். அதனா என்னை மீட்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்திருந்தார்.
 
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆன நிலையில், துபாயில் உள்ள இந்திய தூதரகம் சுல்தானையும் , அவரது குழந்தைகளையு மீட்டு இந்தியாவுக்கு அனுப்பி வைத்தது. தற்போது முகமது கிஷாரை போலீஸார் கைது செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.