கொசு கடித்ததால் வந்த விளைவு.. ரத்தக் கசிவு ஏற்பட்டு,, விமானப் பணிப்பெண் உயிரிழப்பு
விமான பணிப்பெண் ஒருவருக்கு, கையில் கொசு கடித்ததால் உடற்பாகங்கள் செயலிழந்து ரத்தம் கசிந்து கொண்டே இருந்து, பின்ன்னர் அவர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தாய்லாந்து தேசத்திலுள்ள நான் மாகாணத்தைச் சேர்ந்தவர் அப்பிச்சையா ஜெரோன்டி . இவர் பிரபல "தாய் லயன் ஏர்" என்ற நிறுவனத்தில் விமான பணிப்பெண்ணாக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில் கடந்த வாரத்தின் போது, அப்பிச்சையாவின் உடல்நிலை சற்று பல்வீனம் அடையத்தொடங்கியது. இதனைத்தொடர்ந்து அவர் வசிக்கும் வீட்டுக்கு அருகில் வசிக்கும் உறவினர்களின் உடல் நிலையும் மோசமடையத் தொடங்கியது.
இதனையடுத்து வடக்கு தாய்லாந்தில் உள்ள லானா மருத்துவமனைக்கு அவர்கள் சிகிச்சைக்காகச் சென்றனர். அங்குள்ள மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்து பார்த்து கொசு கடித்தால் அவர்களுக்கு டெங்கு ஜுரம் பரவியுள்ளதாகத் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இந்த நோயின் தன்மை அதிகமாகிக் கொண்டிருந்ததால் அப்பிச்சையாவின் உடல்நிலை கவலைக்கிடமானது. உடலின் உள் பாகங்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்க தொடங்கின. இதனால் அவரது உடலில் ரத்தக்கசிவு ஏற்பட்டு கொண்டே இருந்தது. மருத்துவர்கள் கடுமையான சிகிச்ச்சை அளித்தும் பெரிதாக முன்னேற்றம் ஏதுமில்லை. எனவே உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அவர் திங்கட்கிழமை உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.