வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : புதன், 4 செப்டம்பர் 2019 (17:34 IST)

’பாகிஸ்தான் ’ உலகில் மிகவும் ஆபத்தான நாடு - ஜேம்ஸ் மாட்டிஸ் விமர்சனம்

இந்தியாவில் மும்பை தொடர்குண்டுவெடிப்பு, பதன்கோட் தாக்குதல்,மும்பை தாஜ் ஹோட்டல் துப்பாக்கிச் சூடு, புல்வாமா தாக்குதல் என தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இந்தியாவில் குழப்பத்தை உண்டாக்கி மிகப்பெரும் பொருளாதார சீரழிவை உண்டாக்க வேண்டுமென பயங்கரவாதிகள் திட்டம் தீட்டிவந்துள்ளனர். இதற்குஅண்டை நாடான பாகிஸ்தான் தான் அந்த தீவிரவாதிகளுக்கு உதவிவருவதாகவும்  உலக நாடுகளிடம் இந்தியா குற்றம்சாட்டி வருகின்றது. 
இந்நிலையில்  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் அமைச்சரவையில் இருந்தவரும், அமெரிக்க முன்னாள் பாதுக்காப்பு செயலராக இருந்த ஜேம்ஸ் மாட்டிஸ் என்பவர் தம்  பணிக்கால அனுபவம், அப்போது சந்தித்த சவாலான விஷயங்கள் குறித்து தனது கால் சைன் கேயாஸ் என்ற சுயசரிதை புத்தகத்தில் பாகிஸ்தான் நாடுதான் உலகில் ஆபத்தானது என குறிப்பிட்டிள்ளார்.  
 
தன் பணிகாலத்தின் பல்வேறு நாடுகளுடன் அவர் தொடர்புகொண்டிருந்ததால்,அவர் பாகிஸ்தானை குறித்து இத்தகைய கருத்தை வெளியிட்டுள்ளார். மேலும் பாகிஸ்தானின் எதிர்காலத்தை குறித்து யோசிக்க நல்ல தலைவர்கள் இல்லை எனவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.