1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 24 ஜூலை 2019 (12:43 IST)

நாங்கள் போரிட்டால் ஆப்கானிஸ்தானில் ஒரு கோடி பேர் பலியாவார்கள்- அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பதில்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பை சந்திக்க அமெரிக்காவுக்கு பயணித்திருக்கிறார் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான். இரு தரப்பு ராணுவத்தையும் பலப்படுத்துவது குறித்து இருவரும் பேசி கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு துணை போவதாக கூறி பாகிஸ்தானுக்கு ராணுவ உதவிகளை மறுத்தது அமெரிக்கா. இம்ரான் கான் பதவியேற்றதிலிருந்து தீவிரவாதத்தை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தற்போது அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றவரை அதிபர் ட்ரம்ப் வரவேற்றார். இரு நாட்டு ராணுவத்தையும் பலப்படுத்துவது குறித்தும், இரு நாடுகளுக்கிடையேயான பொருளாதார புரிந்துணர்வு குறித்தும் பேசியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் பேச்சு வார்த்தை முடிந்து செய்தியாளர்களுக்கு பதில் அளித்த ட்ரம்ப் “மிக சிறந்த முன்னாள் கிரிக்கெட் வீரரும், பாகிஸ்தான் பிரதமரும் ஆன இன்ரான்கானை சந்தித்து எனக்கு கிடைத்த கௌரவமாகவே கருதுகிறேன்.

ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான்களோடு அரசியல் ரீதியான ஒப்பந்தம் செய்ய அமெரிக்கா அழுத்தம் கொடுக்கும். நாங்கள் ஆப்கானிஸ்தானோடு போரிட விரும்பினால் ஒரு வாரத்தில் வெற்றி பெற்றுவிடுவோம். ஆனால் ஒரு கோடி மக்கள் பலியாக நேரிடும். அமெரிக்கா அதை விரும்பவில்லை.” என்று கூறியுள்ளார்.