செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 8 ஜனவரி 2021 (12:10 IST)

வாட்ஸ் ஆப்பை பயன்படுத்தாதீங்க! இதை யூஸ் பண்ணுங்க! – ஸுகர்பெர்கிற்கு வயித்தெரிச்சலை கிளப்பும் எலான் மஸ்க்!

வாட்ஸப்பை மக்கள் பயன்படுத்துவதை தவிர்க்குமாறு பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் தகவல் தொடர்பிற்கு பயன்பட்டு வரும் செயலிகளில் மிக முக்கியமான செயலியாக விளங்கி வருவது வாட்ஸப். உலகம் முழுவதும் 5 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தும் வாட்ஸப், பேஸ்புக் நிறுவனர் மார் ஸுகர்பெர்கிற்கு சொந்தமானது.

இந்நிலையில் சமீபத்தில் புதிய நிபந்தனைகளை வாட்ஸப் விதித்து அதை ஏற்றுக் கொள்ளாதவர்கள் கணக்குகள் முடக்கப்படும் என கூறியுள்ளது. அதேசமயம் வாட்ஸப் தகவல்கள் எளிதில் திருடப்பட்டு விடும் அபாயம் உள்ளதாகவும் பலர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் “புதிய தனியுரிமை நிபந்தனைகளை அமல்படுத்தியுள்ள வாட்ஸப்புக்கு பதிலாக சிக்னல், டெலிகிராம் உள்ளிட்ட என்க்ரிப்டட் செயலிகளை பயன்படுத்துங்கள்” என தெரிவித்துள்ளார்.