1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: புதன், 15 மே 2019 (12:04 IST)

அமெரிக்க பொருட்களுக்கு வரி அதிகரிப்பு - சீனா அதிரடி!

அமெரிக்காவிலிருந்து சீனாவுக்கு உற்பத்தியாகும் பொருட்களின் வரியை மேலும் அதிகரித்து சீனா உத்தரவிட்டுள்ளது.
 
கடந்த சில மாதங்களாகவே சீனாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையிலான பொருளாதார போர் உச்சத்தை அடைந்துள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு சீனாவும், சீன பொருட்களுக்கு அமெரிக்காவும் வரியை உயர்த்திக்கொண்டே செல்கின்றன. 
 
சமீபத்தில் சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10% இருந்த இறக்குமதி வரியை 25% உயர்த்தி அமெரிக்கா உத்தரவிட்டது. சீனாவுக்கு இது மிகப்பெரும் கோபத்தை ஏற்படுத்தியது. பதிலடியாக சீனா தற்போது ரூ.42 ஆயிரத்து 375 கோடி மதிப்புள்ள அமெரிக்க பொருட்களுக்கு வரியை உயர்த்தி உத்தரவிட்டுள்ளது. இதனால் இரண்டு நாடுகளுக்குமான வர்த்தக போர் மேலும் வலுப்பட்டிருக்கிறது.
”அமெரிக்காவுடன் இணக்கமாக செயல்படாவிட்டால் சீனா பல விபரீதங்களை சந்திக்க வேண்டியிருக்கும். எனவே சீனா புதிய வர்த்தக ஒப்பந்தம் ஒன்றை அமெரிக்காவுடன் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்” என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்தார்.
 
இதற்கு பதிலளித்த சீன வெளியுறவு செய்தி தொடர்பாளர் செங் சுவாங் “வரிகளை உயர்த்தி கொண்டே போவது பிரச்சினைக்கு தீர்வாகாது. சீனா வர்த்தகப்போரை விரும்பவில்லை. அதே சமயம் எங்கள் மீது போர் தொடுத்தால் அதற்கு அஞ்ச போவதுமில்லை. மற்றவர்களுடைய எந்தவொரு நிர்பந்தத்துக்கும் நாங்கள் அடிபணிய மாட்டோம். எங்களது சட்டரீதியான உரிமைகளை பாதுகாத்து கொள்வதற்கான தகுதி எங்களிடம் இருக்கிறது” என்று கூறினார்.
 
இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கிடையிலான இந்த போர் மற்ற நாடுகளையும் பாதிக்கும் என்பதால் பொருளாதார நிபுணர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.