வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. ‌பி‌பி‌சி த‌மி‌ழ்
  3. ‌பி‌பி‌சி செ‌ய்‌திக‌ள்
Written By
Last Modified: வியாழன், 9 மே 2019 (16:19 IST)

வடகொரியா ஒரு வாரத்தில் இரண்டாவது முறையாக ஆயுத சோதனை

குறுகிய தூரம் சென்று தாக்கும் பல ஏவுகணைகளை சோதனை செய்த ஒரு வாரத்திற்கு பின்னர் அடையாளம் காணமுடியாத கணைகளை வடகொரியா ஏவியுள்ளதாக தென்கொரிய ராணுவம் கூறியுள்ளது.
தலைநகர் பியோங்யாங்கின் வடக்கில் சினோ-ரி என்ற இடத்தில் இருந்து இந்த கணைகள் ஏவப்பட்டன என்று தென்கொரிய கூட்டு படைகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர். வடகொரியாவின் கிழக்கு கடற்கரையில் இருந்து பல ஏவுகணைகளை கடந்த சனிக்கிழமை வடகொரியா  ஏவியது.
 
அணு ஆயுதப் பேச்சுவார்த்தையில் தமக்கு சாதகமான சலுகைகளை வழங்க அமெரிக்காவுக்கு அழுத்தம் கொடுக்கவே வடகொரியா இந்த ஆயுத சோதனையை மேற்கொண்டுள்ளது எனக் கருதப்படுகிறது.
முடங்கியுள்ள அணு ஆயுதப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவது பற்றிய பேச்சுவார்த்தைக்கு அமெரிக்க தூதர் தென்கொரிய தலைநகர் சோலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.
 
கடந்த பிப்ரவரி மாதம் வியட்நாமின் தலைநகர் ஹனோயில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜாங்-உன் இடையே நடைபெற்ற இரண்டாவது உச்சி மாநாட்டில் எவ்வித உடன்பாடும் எட்டப்படவில்லை.
 
கிம் முன்வைத்த மோசமான ஒப்பந்தம் என்று விவரிக்கப்பட்ட இந்த உச்சி மாநாட்டின் பேச்சுவார்த்தையில் இருந்து அதிபர் டிரம்ப்  வெளியேறினார்.
 
உள்ளூர் நேரப்படி வியாழன் மாலை 4.30 மணி அளவில் இந்த கணை ஏவப்பட்டதாக கூறிய தென்கொரிய ராணுவம், மேலதிக விவரங்களை  வெளியிடவில்லை.