செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (15:35 IST)

இந்த நாட்டுல யாரும் ஐபிஎல் பாக்கக் கூடாது! – தாலிபான்கள் உத்தரவால் மக்கள் அவதி!

ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் ஆட்சி நடந்து வரும் நிலையில் ஐபிஎல்க்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்திய ப்ரீமியர் லீக் எனப்படும் 20 ஓவர்கள் கொண்ட ஐபிஎல் டி20 போட்டி அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. முன்னதாக இந்த போட்டி ஏப்ரலில் நடந்த நிலையில் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த ஐபிஎல் போட்டியை ஆப்கானிஸ்தானில் ஒளிபரப்ப அந்நாட்டு தாலிபான் அரசு தடை விதித்துள்ளது. இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு எதிரான உள்ளடக்கங்கள் மற்றும் ஆப்கனில் தடை செய்யப்பட்ட வகையாக சிகையலங்காரத்துடன் பெண்கள் மைதான அரங்கில் இருப்பது உள்ளிட்ட காரணங்களால் தடை செய்யப்பட்டுள்ளதாக தாலிபான்கள் விளக்கம் அளித்துள்ளனர்.