செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 21 செப்டம்பர் 2021 (13:02 IST)

நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த தடை! – உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த மத்திய அரசு விதித்த தடை செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கு தடை விதித்து சில மாதங்கள் முன்னதாக மத்திய அரசு புதிய சட்டத்தை அமல்படுத்தியது. இந்நிலையில் இதை எதிர்த்து பம்பர் தயாரிப்பாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வ்ழக்கை விசாரித்த நீதிபதிகள் “மத்திய அரசு மக்களின் நலனுக்காகவே இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. அரசின் முடிவில் நீதிமன்றம் தலையிட முகாந்திரம் இல்லை. எனவே மத்திய அரசு உத்தரவுபடி நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த விதித்த அறிவிப்பு செல்லும்” எனக் கூறியுள்ளனர். மேலும் மத்திய அரசின் அறிவிப்பை தமிழக அரசும் நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.