திங்கள், 2 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 18 மார்ச் 2022 (10:12 IST)

ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கு படிக்க அனுமதி! – தாராளம் காட்டிய தாலிபான்!

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி நடந்து வரும் நிலையில் முதல்முறையாக பெண்கள் படிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் தாலிபான் ஆப்கானிஸ்தானில் ஆட்சியை கைப்பற்றியது. அதை தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள், விதிமுறைகளை தாலிபான் அரசு அனைத்து துறைகளிலும் ஏற்படுத்தி வந்தது. குறிப்பாக பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பெண்கள், ஆண்கள் இணைந்து ஒரே பள்ளி, கல்லூரியில் படிக்க தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில் தற்போது ஆப்கானிஸ்தானில் பெண்களுக்கான உயர்நிலை பள்ளிகளை திறக்க தாலிபான் அனுமதி அளித்துள்ளது. இதற்காக பெண்களுக்கு தனிப்பள்ளி அமைக்கப்பட்டு, பெண் ஆசிரியர்கள் மூலமாக மட்டுமே பாடம் நடத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.