வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 12 மார்ச் 2022 (15:41 IST)

மகளிர் உலகக்கோப்பை… புள்ளிப்பட்டியலில் உச்சத்தில் இந்திய அணி!

இந்திய மகளிர் அணி உலகக்கோப்பை தொடரில் இதுவரை நடந்த 3 போட்டிகளில் 2-ல் வெற்றி பெற்றுள்ளது.

பெண்கள் கிரிக்கெட் அணிக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இப்போது நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொண்ட இந்திய அணி வெற்றி பெற்றது. அதையடுத்து இன்று வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்டது இந்தியா. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 317 ரன்கள் சேர்த்துள்ளது. இதையடுத்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை 162 ரன்களுக்குள் சுருட்டியது இந்திய அணி. இதன் மூலம் இந்திய அணி 155 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்த இமாலய வெற்றியால் இந்திய அணி இப்போது புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு சென்றுள்ளது. பாகிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்திய இந்தியா நியுசிலாந்து அணியிடம் மட்டும் தோல்வியை தழுவியது. இந்தியாவுக்கு அடுத்த இரண்டாம் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது.