வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2019 (21:21 IST)

ராட்சத சுறாவிடம் இருந்து உயிர்தப்பிய நீச்சர் வீரர் ...வைரல் வீடியோ

ஆஸ்திரேலிய நாட்டில் ஒரு நீச்சர் விரர், கடலில் நீச்சலடித்துக்கொண்டிருக்கும் போது, திடீரென வந்த ஒரு சுறாவிடம் இருந்து தப்பித்துச் செல்லும் வீடியோ வைரலாகி வருகிறது.
ஆஸ்திரேலிய நாட்டில் வசித்துவருபவர் கிரிஸ்டோபர் ஜாய். இவர் அந்நாட்டில் சுறா குறித்த விழிப்புணர்வை கடற்கரையில் நின்று ஒலிப்பெருக்கியின் வாயிலாக மக்கள் மற்றும் நீச்சர் வீரர்களுக்கு எச்சரிக்கை அளிப்பார்..
 
இந்நிலையில் இன்று ஒரு நீச்சல் வீரர், கடலில் நீச்சல் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார். 
 
அப்பொழுது, ஒரு பெரிய சுறா ஒன்று அவரை நோக்கி வந்துகொண்டிருந்தது. அப்பொழுது ஜாய் சரியான நேரத்திற்கு ஒலிப்பெருக்கியின் மூலம் சுறா  எனக் கத்தினார். உடனே சுதாரித்துக்கொண்ட நீச்சர் வீரர் சுறாவிடம் இருந்து நொடியில் தப்பினார்.
 
 டிரோனிலிந்து எடுக்கப்பட்ட வீடியோ வைரலாகிவருகிறது. 
 
https://www.facebook.com/WINKNewsTV/videos/535029153937568/