புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sinojkiyan
Last Updated : புதன், 18 செப்டம்பர் 2019 (18:34 IST)

ஹெல்மெட் போட முடியாதுங்க.. போலீஸாரை அசரவிட்ட ’பெரிய தலை’ ! வைரல் வீடியோ

இந்தியாவில்  பெருகிவரும் வாகன விபத்துக்களை குறைக்கும் பொருட்டு,  புதிய மோட்டார் வாகன திருத்தச் சட்டத்தின்படி, ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகள்,  மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் விதிமுறை மீறிச் செல்பவர்களுக்கு மத்திய அரசு பலமடங்கு அபராதம் விதித்துள்ளது. நாட்டில் பல மாநிலங்களில் வாகனத்தைவிட அபராதத் தொகை அதிகம் என்பதால், வாகனத்தை விற்று, வானக ஓட்டிகள் அபராதம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், குஜராத்தில் ஹெல்மெட் அணியாமல் சென்ற ஜாகிர் மாமோன் என்பவரை, போக்குவரத்து போலீஸார் சாலையில் பிடித்தனர். ஏன் ஹெல்மெட் அணியவில்லை என ஜாகித்திடம் போலீஸார் கேட்டுள்ளனர்.
 
அதற்கு, ஜாகிர், எனது தலை பெரிதாக உள்ளதால், எந்த ஹெல்மெட்டும் தலைக்குள் செல்லவில்லை. அதனால் ஹெல்மெட் அணியவில்லை என கூறியுள்ளார்.  அவர் சொன்ன பதிலை கேட்டு போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர், அவருக்கு  அபராதம் விதிக்காமல் அவரை அனுப்பி வைத்தனர்.
 
சமீபத்தில் மத்திய போக்குவரத்துதுறை அமைச்சர் நிதின் கட்காரி, மாநிலங்கள் தங்கள் வசதிக்கேற்ப மோட்டார் விதியின்படி அபராதத் தொகையை குறைத்துக்கொள்ளலாம் எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.