ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 13 ஏப்ரல் 2022 (12:05 IST)

தென் ஆப்பிரிக்காவில் மரபணு மாற்றம் அடைந்த 2 புதிய ஒமைக்ரான் வைரஸ்!

தென் ஆப்பிரிக்காவில் மரபணு மாற்றம் அடைந்த 2 புதிய ஒமைக்ரான் வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல். 

 
இந்தியாவில் பரவிய டெல்டா மற்றும் ஒமிக்ரான் வகை கொரொனா வைரஸ்களால் பல கோடி மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் வேகமாக குறைந்து முடிவை எட்டி வருகிறது.
 
இந்நிலையில் தற்போது உலகம் முழுவதிலும் கொரோனாவின் புதிய திரிபான எக்ஸ்இ வேகமாக பரவத் தொடங்கியது. முன்னதாக மும்பையில் ஒருவருக்கு இந்த புதிய வைரஸ் கண்டறியப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் மத்திய அரசு அதை மறுத்தது.
 
இதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவில் மரபணு மாற்றம் அடைந்த 2 புதிய ஒமைக்ரான் வைரஸ் வகைகள் கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய வகை வைரஸுக்கு பிஏ.4 மற்றும் பிஏ.5 என பெயரிடப்பட்டுள்ளன.
 
இது தென் ஆப்பிரிக்காவில் தொற்று நோய்களின் அதிகரிப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் இவற்றின் மாதிரிகள் பல நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம், போட்ஸ்வானா, பெல்ஜியம், ஜெர்மனி, டென்மார்க் மற்றும் இங்கிலாந்து நாடுகளில் இவை கண்டறியப்பட்டுள்ளது.