வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 1 ஏப்ரல் 2022 (10:45 IST)

இனி முககவசம் கட்டாயமில்லை - எந்தெந்த மாநிலத்தில் தெரியுமா?

டெல்லி மற்றும் மகாராஷ்டிரா மாநிலத்தில் இனி முககவசம் அணிவது கட்டாயமில்லை என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

 
கொரோனா பாதிப்புகள் படுவேகமாக குறைந்து வருகின்றது. கடந்த சில மாதங்கள் முன்னதாக 3 லட்சத்திற்கும் அதிகமாக பதிவான தினசரி பாதிப்புகள் தற்போது வேகமாக குறையத் தொடங்கியுள்ளன. தற்போதைய நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் 1,335 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ள நிலையில் மொத்த பாதிப்புகள் 4,30,25,775 ஆக உயர்ந்துள்ளது.
 
ஒரே நாளில் 52 பேர் உயிரிழந்துள்ள நிலையில் மொத்த பலி எண்ணிக்கை  5,21,181 ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம் மொத்த குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 4,24,90,922 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் 13,672 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்நிலையில் கொரோனா பரவலின் போது மகாராஷ்டிரா அதிக அளவில் பாதிக்கப்பட்டது. அங்கு தொற்று பாதிப்பு தற்போது வெகுவாக குறைந்துவிட்டது. எனவே பொது இடங்களில் முககவசம் அணிவது கட்டாயமில்லை என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 
 
இதேபோல் டெல்லி மாநில அரசும் கொரோனா கட்டுப்பாடுகளை விலக்கிக் கொண்டுள்ளது. அங்கும் இனி முககவசம் அணிவது கட்டாயமில்லை. இதுவரை பொதுமக்கள் முககவசம் அணியாமல் வெளியில் வந்தால் ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது. இனி அபராதம் விதிக்கப்படாது என்று டெல்லி அரசு தெரிவித்துள்ளது.