ஆசியாவின் செக்ஸி ஆண் பட்டத்தை வென்ற பிரபல நடிகர்
ஆசியாவின் செக்ஸியான ஆண் யார் என்ற பட்டத்துக்குரிய வாக்கெடுப்பு ஒன்றை பிரிட்டனை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று நடத்தியது. இணையதளங்கள் வாயிலாக மக்கள் ஓட்டளித்த நிலையில் இதன்முடிவு தற்போது வெளியாகியுள்ளது
இதன்படி 2017ஆம் ஆண்டின் ஆசியாவின் செக்ஸி ஆணாக பிரபல பாலிவுட் நடிகர் சாஹிதகபூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு இந்த பட்டத்தை இந்தி நடிகர் ஹிருத்திக் ரோஷன் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
ஈஸ்டர்ன் ஐ எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் நடத்திய இந்த வாக்கெடுப்பில் ஹிருத்திக் ரோஷனுக்கு இரண்டாவது இடமும், ஜயன் மாலிக் 3வது இடமும், தொலைக்காட்சி நடிகர் விவியன் டிசேனா 4வது இடமும், இன்னொரு தொலைக்காட்சி நடிகர் ஆஷிஷ் சர்மா 5வது இடத்தையும் பெற்றுள்ளனர்.