1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: திங்கள், 6 நவம்பர் 2017 (09:05 IST)

சவுதி அரேபியா இளவரசர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம்

ஏமன் நாட்டு கிளர்ச்சியாளர்களின் ஏவுகணையை எதிர்தாக்குதல் மூலம் அழித்தது, ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளான 11 இளவரசர்கள் கைது செய்யப்பட்டது என கடந்த இரண்டு நாட்களாக சவுதி அரேபியா பரபரப்பில் இருந்த நிலையில் இன்று சவுதி அரேபியாவின் இளவரசர்களில் ஒருவரான மன்சூர் பின் மாக்ரோன் என்பவர் ஹெலிகாப்டர் விபத்தில் மரணம் அடைந்தார்


 


அசிர் மாகாணத்திற்கு அவர் அரசு அதிகாரிகளுடன் ஹெலிகாப்டரில் சென்றபோது ஹெலிகாப்டர் வெடித்து சிதறியதாகவும், இந்த விபத்தில் இளவரசர் உள்பட ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவரும் கொல்லப்பட்டதாகவும் அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

இந்த விபத்துக்கு ஏமன் நாட்டு கிளர்ச்சியாளர்கள் காரணமா? அல்லது ஹெலிகாப்டரின் தொழில்நுட்ப காரணமாக ஏற்பட்டதா? என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது.