செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: ஞாயிறு, 5 நவம்பர் 2017 (10:38 IST)

கிளர்ச்சியாளர்களின் ஏவுகணை இடைமறித்து அழித்த சவுதி அரேபியா

ஏமன் நாட்டின் கிளர்ச்சியாளர்கள் அந்நாட்டு அரசுக்கு எதிராக கடந்த சில வருடங்களாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக சவுதி அரேபியா செயல்பட்டு வருவதால் கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவையும் தாக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது.


 


இந்த நிலையில் நேற்றிரவு கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை ஒன்றை செலுத்தினர். ஆனால் அந்த ஏவுகணையை வழிமறித்து அழித்துவிட்டதாக சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

சவுதி அரேபியாவில் உள்ள ரியாத் விமான நிலையத்தை நோக்கி ஏவுகணை தாக்குதல் நடத்தியது உண்மைதான் என்று கிளர்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர். நடுவானில் நடந்த ஏவுகணை தாக்குதலும், அதனை அழிக்க சவுதி அரேபியா அனுப்பிய எதிர் ஏவுகணையும் சவுதி அரேபியாவை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.